ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலையில் 11 பேர் கைது
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஸ்தோட்டம் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி அனுமதிப் பத்திரமின்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர்கள் உட்பட 11 பேரைக் கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உப்புவெளி பொலிஸாரினால் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஊரடங்கு சட்டத்தை மீறி வர்த்தக நிலையங்களைத் திறந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், குறைந்த பட்ச வாடிக்கையாளர்களுக்கு அதிகமானவர்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக ஊரடங்கு சட்டத்தை மீறியமை, சுகாதார நடைமுறையினை பின்பற்றாமை போன்ற குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மதித்து கோவிட் ஒழிப்பு செயற்பாட்டிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்குமாறும் திருகோணமலை உப்புவெளி பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.









ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
