11,219 ரூபாவில் ஒருவர் ஒரு மாதம் ஜீவிக்கலாம்:தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்
தனி நபர் ஒருவர் 11 ஆயிரத்து 219 ரூபா பணத்தில் ஒரு மாதம் ஜீவிக்கலாம் என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மாவட்டங்களுக்கு அமைய தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் இந்த ஆண்டின் மே மாதத்திற்காக வெளியிட்டுள்ள தேசிய வறுமை வரையறை விபரங்கள் மற்றும் தகவல்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நான்கு பேரை கொண்ட ஒரு குடும்பத்திற்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மாதம் 44 ஆயிரத்து 876 ரூபா தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
2012 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தேசிய மட்டத்தில் ஒரு நபருக்கு 5 ஆயிரத்து 223 ரூபா தேவைப்பட்டது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆண்டுகளில் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒரு நபருக்கு மாதம் 5 ஆயிரத்து 429 ரூபா தேவைப்பட்டது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.