சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பல்சமய இல்லத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு
சுவிட்ஸர்லாந்து (Switzerland) பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தின் 10ஆவது ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இதன்போது, கடந்த சனிக்கிழமை (14) நண்பகல் 13.30 மணிமுதல் பல்சமய இல்லத்தில் பங்களார்களாக உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களின் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
சைவநெறிக்கூடம் பல்சமய இல்லத்தின் பங்களார் ஆகும். இதன்போது, அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் கதவும் அனைத்து மக்களின் வருகைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. மாலை 04.00 மணிமுதல் பல்சமயங்களின் பங்களிப்புக்களுடன் இந்நிகழ்வு தொடங்க பெற்றுள்ளது.
இதன்படி, முதலாவதாக ஆர்கென்ரீனா நாட்டின் சுவிட்ஸர்லாந்து தூதராகப பணிசெய்து கடந்த 2023ஆம் ஆண்டு முதல் பல்சமய இல்லத்தின் தலைவராக விளங்குதம் மத்தியாஸ் சிறப்புரை ஆற்றியுள்ளார்.
இடம்பெற்ற நிகழ்வுகள்
அதனைத் தொடர்ந்து பேர்ன் மாநில அரச அமைச்சரான எவி அலேமான் சிறப்புரை ஆற்றியுதுடன் அவ்வுரைகளைத் தொடர்ந்து சைவநெறிக்கூடத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட வரவேற்பு நடனத்தினை அஞ்செலீனா ரமேஸுடன் அன்னதா முரளிதரன் அரங்கேற்றியுள்ளார்.
சுவிட்ஸர்லாந்து மாநில மற்றும் ஊராட்சி மன்ற சார்பாளர்களும், சுவிட்ஸர்லாந்தின் ஆளும் பல்கட்சி உறுப்பினர்களும், தேவாலய திருச்சபை உறுப்பினர்கள், சமய மற்றும் மொழி அறிஞர்கள், பல்மன்றங்களின் உறுப்பினர்கள், பல்சமய இல்லத்தினதும், சைவநெறி கூடத்தினதும் உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலநூறு மக்கள் வருகை அளித்திருந்தனர்.
சிவருசி தர்மலிங்கம் சசிக்குமாருடன் இளைய தமிழ் அருட்சனையர்கள் சண்முகலிங்கம் சபீன், கணேஸ்வரன் திவ்வியன், சசிக்குமார் கரிராம், சங்குநாத இசைவழங்கியுள்ளனர்.
மேலும், இன்றைய உலகில் பல்சமங்கள் ஒன்றாக ஒற்றுமைக்கும் உலக சமாதானத்திற்கும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டிய தேவையை வலியுறுத்தியதுடன் செந்தமிழில் தேவராம் பாடி அருளுரை வழங்கினார்.
அதேவேளை, நிகழ்விற்கு சென்றிருந்த அனைவருக்கும் ஈழத்து தமிழ்ச்சிற்றுண்டி உணவுகளும் விருந்தாக அளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கைக்கான சுவிஸ்தூதர் சிரி வால்ட்டுக்கு மதிப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிரி வால்ட்
சிரி வால்ட் நோர்வேயில் பிறந்து, சுவிஸ் நாட்டின் செங்காளன் மாநிலத்தில் வளர்ந்தவர் ஆவார். இவர் பேர்ன் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய மொழியியல் மற்றும் வரலாற்று பாடங்களில் கல்வி கற்று, 1997ஆம் ஆண்டில் ரோம அரசின் வரலாற்றாளர் கா. லினிசியஸ் மேசர் தொடர்பான ஆய்வுக்கட்டுரையுடன் முனைவர் பட்டம் பெற்றார்.
இதன்பின், ஒரு ஆண்டுக் காலம் ஆக்ஸ்போர்டில் பார்வையாளர் மாணவராகவும் இருந்துள்ளார். 1997ஆம் ஆண்டு, சிரி வால்ட் சுவிஸ் வெளியுறவுத்துறை (EDA) இராஜதந்திரப் பணியில் சேர்ந்து, பேர்ன் மற்றும் கைரோ நகரங்களில் பயிற்சியை நிறைவு செய்தார்.
1999ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை, பேர்னில் ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு (OSCE) பிரிவில் இராஜதந்திர பணியாளராக பணியாற்றினார். பின்னர், தென் கொரியாவின் சேவூலில் உள்ள தூதரகத்தில் துணைத் தலைவர் பதவியில் இருந்தார்.
இதனை அடுத்து, பேர்னில் உள்ள ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவிலும், நைரோபி மற்றும் துனிசில் உள்ள தூதரகங்களில் துணைத் தலைவர் பதவியிலும் பணியாற்றியவராவர்.
2016ஆம் ஆண்டில், அவர் காங்கோ ஜனநாயகக் குடியரசு, காங்கோ குடியரசு மற்றும் காபூன் ஆகிய நாடுகளுக்கான தூதராக கின்ஷாசாவில் தனது பதவியை ஏற்றார். 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை, பெர்னில் உள்ள சப்-சஹாரா மற்றும் பிராங்கோபோனி பிரிவின் தலைவராக பணியாற்றினார்.
சிரி வால்ட், 2023ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கும் மாலைத்தீவுக்குமான சுவிஸ் தூதராக கொழும்பில் இருந்து தனது பணியை ஆற்றிவருகின்றார். கடந்த 7ஆம் மாதம் இலங்கை வருகை தந்திருந்த சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார், கொழும்பில் அமைந்துள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் சிரி வால்ட்டினை நேர்கண்டு சைவநெறிக்கூடத்தின் பணிகள் தொடர்பாக ஆழமாக கலந்துபேசியிருந்தார்.
இம்முறை பல்சமய இல்லத்திற்கும் சைவநெறிக்கூடத்திற்கும் சுவிட்ஸர்லாந்திற்கான தூதர் வருகை அளித்திருந்தார். இதன்போது சைவநெறிக்கூடத்தால் இவருக்கு ஆலத்தி எடுத்து மாலையிடப்பட்டு சைவநெறிக்கூடத்தால் மதிப்பளிப்பு அளிக்கப்பட்டது.
சைவநெறிக்கூடம்
சைவநெறிக்கூடம் முன்னெடுக்கும் சமுதாயப்பணிகள், பெண்களும் - விரும்பும் அனைவரும் அருட்சுனையர் ஆகலாம், தாய்மொழி தமிழில் வழிபாடு, தமிழர்கள் புலப்பெயர்வு, தற்கா தாயகத்து அரசியல் சூழல் என்பன குறித்து சுவிஸ்துதருடன் தேனீர்விருந்தில் கலந்து பேசப்பட்டது.
சீர்த்திருத்த மீளெழுச்சி சைவநெறியை சைவநெறிக்கூடம் முன்னெடுக்கும் பணியில் உள்ள சவால்களும், கடந்து வந்த பட்டறிவும் இதில் அலசப்பட்டது. சைவநெறிக்கூடம் சுவிஸிலும், இங்கிலாந்திலும், இலங்கையிலும் முன்னெடுக்கும் தமிழ் வழிபாடு என்பது சடங்குகள் கடந்து வாழ்வியலுக்கு தேவையான பல பணிகளையும் ஆற்றுவது என்பதும் சிரி வால்ட்டுக்கு புரியும்படி எடுத்துரைக்கப்பட்டது.
புரதிலிற்கான ஒரு பாலமாக இந்நிகழ்வு இன்று அமைந்ததாக அனைவரும் நம்பிக்கை வெளிப்படுத்தினர். பொதுப்பணிகளை தொடர்வோம், இவ்வாறான பிறிதொரு நல்ல சூழலில் அடுத்தும் நேரில் காண்போம் என்ற வசனத்துடன் சுவிஸ் தூதருடன் இச்சந்திப்பு நிறைவுற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |