போதைப்பொருள் வேட்டையில் ஒரே நாளில் ஆயிரம் பேர் கைது!
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளில் ஆயிரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(10.4.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 5 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
கைது
அத்துடன், சட்டவிரோத சொத்துச் சேர்ப்பு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் மீட்பு
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து 480 கிராம் ஹெரோயின், 772 கிராம் ஐஸ், 10 கிலோகிராம் 515 கிராம் கஞ்சா, 1,507 கஞ்சா செடிகள், 65 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 373 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 819 போதை மாத்திரைகள், 65 கிராம் மதனமோதகம் மற்றும் 2 கிலோகிராம் 447 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்கும் நோக்கில் இந்தத் தேசிய திட்டம் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri