வவுனியா வடக்கில் நூறு வயதுடைய வயோதிப தாய்க்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது
வயோதிப தாயொருவருக்கு நேற்றையதினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் நடமாடும் மருத்துவ சேவையினரால் முதலாவது கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில் அனைத்து மக்களும் தடுப்பூசியினை பெற்று வருகின்றனர். சிலர் அச்சம் காரணமாகத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை.
ஆனால் 100 வயது நிரம்பிய ஒரு முதியவர் தடுப்பூசி போட முன்வந்தமை பாராட்டத்தக்க விடயமாகும்.
அந்தவகையில் நெடுங்கேணி, மருதோடை கிராமத்தில் வசிக்கும் 100 வயது நிரம்பிய அன்னை ஒருவர் கோவிட் தடுப்பூசி போட விரும்புவதாகக் கூறியதற்கிணங்க வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் நடமாடும் தடுப்பூசிச்சேவையின் மூலம் முதலாவது தடுப்பூசி நேற்றையதினம்(11) வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த வயதிலும் தடுப்பூசி போட வேண்டுமென்று விழிப்புணர்வுடைய ஒருவரிற்குத் தடுப்பூசி வழங்கியமையையிட்டு பெருமை கொள்வதாக வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam