கிராமத்திற்குள் நுழைந்த 100 யானைகள்! கடும் அச்சத்தில் கிராம மக்கள்
அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை நிறைவடையும் நேரத்தில் 100 இற்கும் மேற்பட்ட யானைகள் தினமும் வருகை தருவதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி, மாவடிப்பள்ளி, நிந்தவூர், இறக்காமம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டி பட்டியாக தினமும் யானைக் கூட்டங்கள் வருகை தருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், யானைகளை கட்டுப்படுத்த இன்றும் கூட வன ஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் குறித்த யானைகள் பொதுமக்களின் குடியிருப்புக்களை தாக்கி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விரட்டும் நடவடிக்கை
இதேவேளை காட்டு யானைகளை அன்றாடம் சிறுவர்கள் விரட்டும் நிகழ்வு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை எல்லைக்குட்பட்ட புற நகர் பகுதிகளில் தற்போது வழமையாகி விட்டது.
மேற்குறித்த பிரதேச வயல் வெளி பகுதியில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் 40 முதல் 50 வரை வருகை தந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு வருகை தரும் காட்டு யானைகள் அருகில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உள்நுழைவதுடன் அவ் யானைகளை சிறுவர்கள் விரட்டும் நடவடிக்கையில் கடந்த சில தினங்களில் ஈடுபட்டதை காண முடிந்தது.
யானைகளின் வருகை
யானை - மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு தமது திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் வயல் நெல் அறுவடை முடிந்தால் இவ் பிரதேசங்களில் யானைகளின் வருகை தொடர்கதையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
