யாழில் கிணற்றில் விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
அச்சுவேலி தோப்பு பகுதியில் நேற்று மாலை (26) கிணற்றில் விழுந்த சிறுவன் பரிதாபமாக உயர்ந்துள்ளார்.
சம்பவத்தில் தோப்பு பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பிரதீபன் தர்சன் எனும் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
விசாரணை நடவடிக்கை
அச்சுவேலி தோப்பு பகுதியில் பேரனுடன் தோட்டத்திற்கு நீர் இறைப்பதற்கு சென்ற வேளை சிறுவன் நீரை இறைத்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வளர்ப்பு மீன் பிடிப்பதற்காக வாளியை கயிற்றுடன் கிணற்றில் இறக்கிய போது கால் தடுமாறிய நிலையில் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.
கிணற்றில் அதிகளவு நீர் நிறைந்து காணப்பட்டமையால் கிணற்றில் வீழ்ந்த சிறுவன்மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



