இராகலையில் காணாமல்போயிருந்த சிறுவன் கண்டுபிடிப்பு
இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் காணாமல்போயிருந்த 10 வயதுடைய சிறுவன் சற்றுமுன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் 10 வயதுடைய சிறுவன் (24.02.2023) அன்று மாலையிலிருந்து காணாமல்போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல்போன சிறுவன் இராகலை கிருஸ்ணன் ஜூனியர் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் சுரேஷ்குமார் லுக்சான் லோகிதன் (வயது 10) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை - ஹாலி எள்ள திக்வல தோட்டத்தை சேர்ந்த இந்த சிறுவனின் தாய் வெளிநாட்டுக்கு தொழிலுக்காக சென்று நான்கு மாதங்களாகின்ற நிலையில் தந்தை பதுளையில் வாகனங்கள் திருத்தும் நிலையம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் தனது மகனை இராகலையில் சென் லெணாட்ஸ் தோட்டத்தில் உள்ள தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்த நிலையில் காணாமல்போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
