சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு
சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த பணிப்புறக்கணிப்பானது இன்று (10.01.2024) காலை 08.00 மணி முதல் 48 மணித்தியாலத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணிப்புறக்கணிப்பு
பணிப்புறக்கணிப்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம், அரச மருந்தாளர்கள் சங்கம், மருத்துவ ஆய்வக தொழில் வல்லுநர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை தாதியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் குறித்த அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.
எனினும், சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு வைத்தியசாலை, சிறுநீரக வைத்தியசாலை, மத்திய இரத்த வங்கி மற்றும் மனநல நிறுவனம் போன்றன தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவுக்கு எதிர்ப்பு தெரிவித்து துணை மருத்துவ வல்லுனர்கள் நேற்று அரசு மருத்துவமனைகளில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |