பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 10 சட்டவிரோத முச்சக்கரவண்டிகள் - சாரதிகளும்
சுற்றுலாவிற்கு வந்த 10 முச்சக்கர வண்டிகளை பறிமுதல் செய்து அதன் சாரதிகளை கைது செய்து பின்னர் பிணை வழங்கப்பட்டது என பூண்டுலோயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் விஜேசுந்தர தெரிவித்தார்.
சட்டவிரோத நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை பெருத்திக்கொண்டு வந்த முச்சக்கர வண்டிகயே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கம்பளை - பூண்டுலோயா பிரதான வீதியில் சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டிகளில் கம்பளையைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று சுற்றுலாவிற்கு வருவதாக புகார் கிடைக்கப்பெற்றுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
தொடர்ந்து, முச்சக்கர வண்டிகளை சோதனை செய்து அதன் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், தற்போது பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட 10 முச்சக்கர வண்டிகளும் நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் ஜனக பண்டாரவிடம் பரிசோதனைக்காக காண்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மோட்டார் வாகன ஆய்வாளரின் முடிவின்படி நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களைக் கொண்டுள்ளது.
கூடுதலான மின் விளக்குகளை பொருத்துதல் மற்றும் வீதிக்கு தகுதியற்ற நிலையில் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் மீது நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமைப் பரிசோதகர் சுகத் விஜேசுந்தர தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
