நாட்டின் மக்கள் தொகையில் 10 வீதமானோர் மனநல நோயால் பாதிப்பு
நாட்டின் மக்கள் தொகையில் 10 வீதமானோர் மனநல நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 2% பேர் கடுமையான மனநல நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (08) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தலைமையில் இடம்பெற்ற உலக மனநல சுகாதார தின நிகழ்விலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் 37,000 நோயாளிகள் மனநல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலக மனநல சுகாதார தினம்
உலக மனநல சுகாதார தினம் சர்வதேசத்திற்கு தேவையாக உள்ளது. ஏனென்றால்,எம்மை போன்ற நாடுகளில் மனநலம் மற்றும் அதன் தன்மை தொடர்பில் காணப்படும் கடுமையான சிக்கல்கள் உள்ளதால் ஆகும்.
அரசாங்கமாக, மனநலம் குறித்த விவாதம் இன்னும் ஆழமாக நடத்தப்பட வேண்டும், மேலும் இந்த சேவை இன்னும் நிலையானதாக நிறுவப்பட வேண்டும் என்பதை நாங்கள் காண்கிறோம். மிக குறைந்த மட்டத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் சேவை மிகவும் முறையாக இருக்க வேண்டும்.
நமது நாட்டின் மனநலத்திட்டங்கள் மிகவும் பலவீனமானவை மற்றும் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |