மட்டக்களப்பில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 10 பேர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பொலிஸ் நிலையப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நீதிமன்ற பிடியாணையுடன் 3 பேர் உட்பட மொத்தம் 10 பேர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, காத்தான்குடிபொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1370 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

அதேபோல், வவுணதீவு பகுதியில் 1500 மில்லி லீற்றர் கசிப்பு வைத்திருந்ததாக ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
கல்குடா பகுதியில் 4000 மில்லி லீற்றர் கசிப்புடன் ஒருவரும், ஏறாவூர் பகுதியில் 820 மில்லிகிராம் கஞ்சாவுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸார் கைது
மேலும், கரடியனாறு பகுதியில் 1000 மில்லி லீற்றர் கசிப்புடன் ஒருவரும், கொக்கட்டிச்சோலை பகுதியில் 1500 மில்லி லீற்றர் கசிப்புடன் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனுடன், நீதிமன்ற பிடியாணையுடன் தலைமறைவாக இருந்த 3 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு போதைப்பொருள் மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் மற்றும் நீதிமன்ற பிடியாணையுடன் இருந்த 3 பேர் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களின் வழியாக நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam