கௌதாரி முனை பகுதியில் கடலட்டை பிடித்த 10 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கிளிநொச்சி- கௌதாரி முனை பகுதியில் இரவு வேளையில் அனுமதிப்பத்திரம் இன்றி கடலட்டை பிடித்த 10 பேருக்கு தலா தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கௌதாரி முனை பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி இரவு வேளையில் கடல் அட்டை பிடித்த குற்றச்சாட்டில் 10 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, கடற்றொழிலாளர்களுக்கு எதிராக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தினால் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நெடுந்தீவு தனக்கான தனித்துவத்துடன் வாழ்வதற்கு வழிவகுக்கப்படும்: யாழ். மாநகர சபை உறுப்பினர் தெரிவிப்பு
தண்டப்பணம்
குறித்த வழக்கானது நேற்று(22.4.2026) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது அனுமதிப்பத்திரம் இன்றியும், தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைகளை பயன்படுத்தியும் தொழிலில் ஈடுபட்ட இரு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 20,000 ரூபாய் வீதம் ஒவ்வொருவருக்கும் நாற்பதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam