வரவு செலவுத்திட்டத்திற்கு பின் மேலும் 10 புதிய அமைச்சர்கள்
வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்புக்கு பின்னர் மீண்டும் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜீவன் தொண்டமானுக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு
இதன் போது மேலும் 10 அமைச்சரவை அந்தஸதுள்ள அமைச்சர்கள் மற்றுறும் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக வஜிர அபேவர்தன, ஜீவன் தொண்டமான், துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசாங்கத்தில் தற்போது 20 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 38 ராஜாங்க அமைச்சர்களும் பதவி வகிக்கின்றனர். புதிதாக 10 பேர் நியமிக்கப்பட்ட பின்னர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் அதிகரிக்கும்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
