உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் இலங்கைக்குள் குவியும் டொலர்கள்!
உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் நாள் தோறும் சட்டவிரோதமாக பத்து மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது.
இத்தாலி, டுபாய், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டனவற்றிலிருந்து இவ்வாறு பணம் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்டியல் மற்றும் ஹவாலா முறைமைகள் சட்டவிரோதமானவை என்ற காரணத்தினால் இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் முறைமை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற போதிலும் இந்த உண்டியல் மற்றும் ஹாவாலா முறைமையுடன் அரசியல்வாதிகள், வங்கி அதிகாரிகள், வர்த்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்புபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதன் காரணமாகவே உண்டியல் மற்றும் ஹாவலா குறித்து கிரமமான விசாரணை நடத்தப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வெகுவாக அதிகரித்துள்ள போதிலும் அது இற்றைப்படுத்தப்படாது 203 ரூபா என்ற தொகையில் தொடர்ந்தும் மத்திய வங்கி பேணி வருகின்றது.
எனினும் சந்தையில் டொலர் ஒன்று 243 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. உண்டியில் முறையில் இந்த கூடுதல் தொகை கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உண்டியல் முறை குறித்து சுயாதீனமான அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதில்லை என தெற்கு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri