22ஆவது திருத்தச்சட்டம் நிறைவேறியதால் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேர்ந்துள்ள கதி (Video)
22ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்க முடியாது என்பதால் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்கவுள்ளனர்.
எனவே அவர்களை கௌரவமான முறையில் பதவி விலக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், 43ஆவது படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசில் உயர்மட்டப்பதவிகளை வகித்து வரும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்களும் பதவிகளில் இருந்து விலக்கும் தீர்மானத்தை எடுக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகையின் கண்ணோட்டம்