அயர்லாந்தில் நடந்த பாரிய வெடிப்பு சம்பவம் - 10 பேர் பலி
அயர்லாந்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Donegal, Creeslough இல் நடந்த குண்டுவெடிப்பில் நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மீட்பு பணிகள் தீவிரம்
இந்நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனவர்கள் பற்றி குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் இல்லையென பொலிஸார் குறிப்பிட்டனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் Donegal பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், நேற்று முதல் தொடர் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடர்கின்றன, இந்த நேரத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது மேலும் உயிரிழப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரங்கல் தெரிவித்த ஆப்பிள்கிரீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி
நான்கு ஆண்கள் மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியான 10 பேரும் க்ரீஸ்லோ பகுதியை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்புக்கு உள்ளான ஆப்பிள்கிரீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜோ பாரெட், க்ரீஸ்லோவில் நடந்த துயர்கரமான சம்பவத்தால் நிறுவனம் முற்றிலும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இது மிகவும் சோகமான நிகழ்வு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் மற்றும் க்ரீஸ்லோவில் உள்ள முழு சமூகத்திற்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.