நாட்டில் அதிகரிக்கும் ஆபத்து! விசேட வைத்திய நிபுணர் வெளியிட்டுள்ள தகவல்
ஒக்சிஜன் வழங்கப்படும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்தது.
அதி தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள 77 கட்டில்களில் 66 கட்டில்களிலும் கோ நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டார்.
5700 கோவிட் நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 2650 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி கூறினார்.
இதேவேளை, நாட்டின் 4 மாவட்டங்களில் 50 வீதத்திற்கும் மேற்பட்டோருக்கு பூஸ்ட்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில் 63 வீதமானோருக்கு பூஸ்ட்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன், கண்டி, அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பெருமளவான மக்கள் பூஸ்ட்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.