கொழும்பில் 10 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவித்தல்!
கொழும்பு - புற நகர்ப் பகுதிகளில் பத்து மணித்தியால நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை (29.04.2023) காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரை நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கொலன்னாவ நகரசபை பகுதி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, அத்துல்கோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
பராமரிப்பு பணிகள்
கொலன்னாவ நீர் விநியோக நிலையத்தின் பிரதான கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
