புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோயிலடி பகுதியில் புதையல் தோண்டும் நோக்குடன் பயணித்த பத்து பேரைக் கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தம்பலகாமம் பொலிஸார் கோயிலடி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரை ஸ்கேனர் இயந்திரத்துடன் கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மற்றைய நபர்களையும் கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த சந்தேக நபர்கள் கந்தளாய் முள்ளிப்பொத்தானை குளியாப்பிட்டிய, குருநாகல் ஹம்பாந்தோட்டை பகுதிகளைச் சேர்ந்த 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் 10 பேரையும் தம்பலகாமம் பொலிஸார்
விசாரணை செய்து வருவதுடன், குறித்த சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்றில்
முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
