திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி பணிப்புரை
அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த பணிப்புரை வழங்கியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை விரைவாக வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.

39 மரணங்கள் பதிவு
இதேவேளை, நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 39 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
17 மாவட்டங்களில் உள்ள 79 பிரதேச செயலாளர் பிரிவுகள் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam