இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள இலங்கை
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இணையான இந்திய ரூபா நாணய மாற்று வசதியை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
இது இலங்கை - இந்திய வர்த்தகத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
இதற்கிடையில், ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நீடிப்பது தொடர்பிலும் இந்திய அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
ஆசிய தீர்வு ஒன்றியத்தின் கீழ் ஐந்து ஆண்டுகள் கடன் தீர்வு திட்டத்தின் கீழ் குறித்த கடனை ஐந்து வருட காலத்திற்குள் தீர்க்க முயற்சிக்கப்படுகிறது.
எனினும் இன்னும் பேச்சுவார்த்தை ஆரம்ப நிலையிலேயே உள்ளதாக இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நேரடி முதலீடு
400 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நாணய பரிமாற்றத்திற்காக இலங்கை இவ்வளவு நீண்ட கால நீடிப்பை பெற வாய்ப்பில்லை என குமாரசுவாமி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு போர்ட் சிட்டி போன்ற சீன நிதியுதவியுடன் கூடிய பாரிய திட்டங்களுக்கு சீனாவிடமிருந்து வெளிநாட்டு நேரடி முதலீடுகளை எதிர்பார்க்கிறது.
இதேவேளை இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு
நாடுகளுடனான உறவுகள் முக்கியமானதாக இருக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.