கம்பஹாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,676 தொற்றாளர்கள் அடையாளம்
கம்பஹா மாவட்டத்தில் மேலும் 1,676 தொற்றாளர்கள் கடந்த 24 மணிநேரத்தில் இனங்காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் 15 சுகாதாரப் பிரிவுகளிலேயே தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக பியகம பொதுசுகாதார பிரிவில் 218 தொற்றாளர்களும், மஹர பிரிவில் 195 தொற்றாளர்களும், மீரிகம பிரிவில் 147 தொற்றாளர்களும், அத்தனகல்ல பிரிவில் 130 தொற்றாளர்களும், திவுலப்பிட்டிய மற்றும் வத்தளை ஆகிய பிரிவுகளில் 121 தொற்றாளர்களும், தொம்பே பிரிவில் 110 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
கட்டான பிரிவில் 102 தொற்றாளர்களும், ஜா - எல பிரிவில் 95 தொற்றாளர்களும், களனிப் பிரிவில் 94 தொற்றாளர்களும், மினுவாங்கொட பிரிவில் 90 தொற்றாளர்களும், நீர்கொழும்பு பிரிவில் 89 தொற்றாளர்களும், சீதுவ பிரிவில் 84 தொற்றாளர்களும், கம்பஹா பிரிவில் 30 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த மாவட்டத்தில் ஆடைத்தொழிற்சாலை கொத்தணி தொற்றாளர்கள் 83 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க வலயத்தில் 72 தொற்றாளர்களும், பியகம வலயத்தில் 11 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.




