அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை: பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர சூழலைச் சார்ந்தது என ஸெலென்ஸ்கி அறிவிப்பு
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அடுத்தகட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவது, மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்புச் சூழல் மற்றும் உண்மையான இராஜதந்திர வாய்ப்புகளைப் பொறுத்தே அமையும் என்று தெரிவித்துள்ளார்.
மார்ச் மாத தொடக்கத்தில் அபுதாபியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் ஐக்கிய அரபு அமீரகப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
புதிய வழிமுறைகள்
இதன் காரணமாக, உக்ரைன் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு புதிய வழிமுறைகளை வழங்கவுள்ளதாகத் தெரிவித்த ஸெலென்ஸ்கி, பாதுகாப்பான சூழல் நிலவினால் மட்டுமே பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri