தலை வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட உக்ரைனிய வீரர்: ரிஷி சுனக் உடன் கலந்துரையாடிய ஜெலென்ஸ்கி
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உடன் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தகவல் வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓர் ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
Had a phone talk with ?? Prime Minister @RishiSunak. Discussed the situation at the front, our defense needs, increased support & planned intl events. I thanked him for condemning the inhumane execution of a ?? soldier. Together we must stop the aggressor & put an end to terror!
— Володимир Зеленський (@ZelenskyyUa) April 14, 2023
ரஷ்யாவின் தாக்குதலுக்கு கடும் கண்டனம்
உக்ரைனிய இராணுவ வீரர் ரஷ்ய இராணுவத்தினால் கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
கடந்த வாரத்தில் சமூக ஊடகங்களில் வெளிவந்த இரண்டு வீடியோக்களில் காட்டப்பட்டுள்ள உக்ரைனிய வீரர்களின் தலையை துண்டித்தவர்கள் "மிருகங்கள்" என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.
ரிஷி சுனக்கிற்கு நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி
இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உடன் ஜெலென்ஸ்கி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், 'பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உடன் எங்கள் பாதுகாப்பு தேவைகள், முன்னணியில் உள்ள நிலைமை, அதிகரித்த ஆதரவு மற்றும் திட்டமிடப்பட்ட சர்வதேச நிகழ்வுகள் குறித்து விவாதித்தோம்.
உக்ரைன் இராணுவ வீரரின் மனிதாபிமானமற்ற மரண தண்டனையை கண்டித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். நாம் ஒன்றாக சேர்ந்து ஆக்கிரமிப்பாளர்களை நிறுத்த வேண்டும் மற்றும் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.