போர்நிறுத்த பேச்சுவார்த்தை! மீண்டும் புடினை விமர்சித்த ஜெலென்ஸ்கி
போர்நிறுத்தத் திட்டத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வழங்கியுள்ள பதில் சூழ்ச்சித்தனமானது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமைதி ஒப்பந்தத்தை கட்டாயப்படுத்த ரஷ்யாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
போர்நிறுத்தத் திட்டத்திற்கு நேரடியாக மறுப்பு தெரிவிக்காவிட்டாலும், அதனை தாமதப்படுத்த புடின் முயற்சிப்பார் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியில் அழுத்தம்
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து ரஷ்ய - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன.
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தால் ரஷ்யா மீது பொருளாதார ரீதியில் அழுத்தம் கொடுக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளான ஜெலென்ஸ்கி மற்றும் புடின் ஆகியோர் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |