குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் செய்த சத்தியப்பிரமாணம்! புதிய காணொளி வெளியானது (Video)
முழு இலங்கையையும் நிலைகுலையச் செய்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இதுவரை வெளிவராத புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான குழுவினர், தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட காணொளியே தற்போது வெளியாகியுள்ளது.
சகோதர மொழி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட குறித்த காணொளி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 200இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் அவர்களுள் 40 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.
குறித்த குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நாடளாவிய ரீதியில் பெருமளவானோர் கைது செய்யப்பட்டு தற்போது வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் சஹ்ரான் ஹாசிமினி் குடும்பத்தார் சிலரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
