வேடுவர் சமூகத்தை சித்தரிக்கும் யூடியூப் காணொளி : குற்றப் புலனாய்வுத் துறை முறைப்பாடு
வேடுவர் சமூகத்தை சித்தரிக்கும் யூடியூப் காணொளி தொடர்பாக நகைச்சுவை நடிகர்கள் கெஹான் பிளோக் மற்றும் டினோ கொரேரா ஆகியோர் மீது வேடுவத் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் முறையிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த வார தொடக்கத்தில், அவர் பிளாக் & டினோ மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
அவர்களின் இந்த காணொளி பூர்வீக வேடுவ சமூகத்தை தவறாக சித்தரிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
குற்றப்புலனாய்வு துறை
இந்த நிலையில், குற்றப்புலனாய்வு துறையில், முறைப்பட்டை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைந்த அவர்,
'இந்த காணொளி, வணிக நோக்கங்களுக்காக தனது சமூகத்தின் பாரம்பரியத்தை இழக்கச் செய்து, தமது மொழி மற்றும் மரபுகளை சிதைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், காணொளி படைப்பாளர்களைத் தொடர்புகொண்டு காணொளியை நீக்கக் கோருவதற்கான தனது முயற்சிகள் தோல்வியடைதன” என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
