பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கம்பளை கலஹா போன்ற பல்வேறு பகுதிகளுக்குச் சென்று 21இற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் நகைக்கடைகளை உடைத்து பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள், தங்கம், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற இளைஞர்கள் குழுவொன்றை கம்பளை கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பகுதியில் ஆறு திருட்டுகளும், வவுனியா பகுதியில் ஏழு திருட்டுகளும், கம்பளை கலஹா பகுதியில் ஏழு திருட்டுகளும், நுவரெலியா கந்தபொல பகுதியில் ஏழு திருட்டுகளையும் மேற்காண்ட குழுவினரே இவ்வாறு நேற்று(25.12.2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தந்த பகுதிகளில் உள்ள தங்கக்கடைகள், கோவில்களில் உள்ள உண்டியல்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணம் ஆகியவை இவர்களின் முக்கிய இலக்குகள் என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஒன்பது பிடியாணைகள்
அதன்படி, கலஹா பகுதியில் உள்ள மூன்று தங்கப் கடைகளில், கோவில் மற்றும் மருந்து கடை போன்ற கடைகளை உடைத்து தங்கப் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டதுடன், மருந்துக் கடையில் இருந்த 12 இலட்சம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் எல்லைக்குள் மாத்திரம் இந்த சந்தேக நபர்களுக்கு ஒன்பது பிடியாணைகள் உள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் நான்கு வருடங்களாக இந்தத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு நீதிமன்றங்கள் வழங்கிய பிடியாணையுடன் மாத்தளை, கந்தபொல, கலஹா போன்ற பகுதிகளுக்கு அவ்வப்போது சென்று வாடகைக்கு வீடுகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இந்தத் திருட்டுச் சம்பவங்களைச் செய்து வந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பகுதியில் தாலிகொடி, தங்க நகைகள் மற்றும் பணம் திருடியதோடு வீடுகளுக்குச் சென்று கத்தி, போன்ற ஆயுதங்களை எடுத்துச் சென்று குடியிருப்பாளர்களை பயமுறுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 19,21,22,23,26,33 வயதுகளை கொண்டவர்கள் எனவும், இவர்கள் இவ்வாறு கொள்ளையடித்த பணத்தை தங்களது போதைப்பொருள் பாவனைக்கு செலவலித்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்களால் நாடளாவிய ரீதியில் திருடப்பட்ட தங்கக் கட்டிகள் சில மீட்கப்பட்டு யாழ்ப்பாணப் பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் அனைவரும் கண்டி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
