நாட்டின் பல பகுதிகளில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் கைது
பொலன்னறுவை, கதுருவலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் ஐஸ் போதைப் பொருளுடன் காத்தான்குடியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கதுருவலை , ஹிஜ்ரா மாவத்தையைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர்.
அவரிடம் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 51.68 கிராம் ஐஸ் போதைப்பொருளை காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் 17 ஆயிரம் ரூபா பணம், இரண்டு கைபேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் அவரிடம் இருந்து பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மூன்று வீடுகளைச் சோதனையிட்ட
அதேவேளை, காத்தான்குடியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் 51 கிராம் 680 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய இளைஞர் எனவும் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ஐஸ் போதைப்பொருள் சகிதம் கைது செய்யப்பட்ட கம்பளை தம்பதியினர் தங்கியிருந்த மூன்று வீடுகளைச் சோதனையிட்ட பொலிஸார், இரு வீடுகளில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
நீதிமன்றத்தில் முற்படுத்த
கம்பளையில் இருந்து கினிகத்தேனை வரை ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் கடந்த 25 ஆம் திகதி நாவலப்பிட்டியில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
கணவனுக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பொலிஸாரால் பெற்றப்பட்டிருந்தது. ஐந்து மாதக் கர்ப்பிணியான மனைவி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
[LVHTY4U[
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



