யாழில் பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்ட இளைஞர்! சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் : கஜேந்திரன் குற்றச்சாட்டு
யாழ். காரை நகர் பகுதியிலே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் இது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கொலை என செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டினை அவர் இன்று(06.06.2024) நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி யாழ். காரை நகர் கிராம சேவையாளர் அலுவலகமொன்றில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் நிற்பதாக கிராம சேவையாளரால் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டார்.
இந்நிலையில் அதே மாதம் 18 ஆம் திகதி பொன்னாலையில் சிதைந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.அந்த கொலை தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. இது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கொலை.
வடக்கு கிழக்கிலே பொலிஸாருடைய அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றுவருகின்ற நிலையில், இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்பது தொடர்பில் எங்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
