போதையால் சீரழியும் இளைஞர் சமூகம்
சமூகத்தின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் பெரும்பங்காற்றுபவர்கள் இளைஞர்கள். இளைஞர்கள் மத்தியில் இன்று நிகழ்கின்ற கலாச்சார பண்பாடு ரீதியான சீரழிவுகளுக்கு போதைப்பொருள் முக்கியமான காரணமாக ஊடகங்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
போதைப் பொருட்களாக மதுபானம், கள்ளு, கஞ்சா, கெரோஜின் போன்றவற்றை குறிப்பிடலாம். இவை இளைஞர் சமூகத்தின் மத்தியில் பரவலாக பரம்பி சமூகத்தை சீரழிக்கின்றது.
சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டிய இளைஞர்கள் இன்று போதைக்கு அடிமையாகி சமுதாய வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளனர்.
சமுதாய வளர்ச்சி
எதிர்கால சமூகத்தினருக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டிய இளைஞர்கள் போதைப் பழக்கத்தினால் மிக இழிவாக நடந்து கொள்வதை நாம் சமூகத்தில் காணக் கூடியதாக உள்ளது.
தாம் சீரழிவது மட்டுமல்லாது சிறுவர்களை இப்பழக்கத்திற்கு அடிமையாக்க முற்படுகின்றனர். இவர்களின் இவ்வாறான தாழ்ந்த செயல்கள் சமுதாய வளர்ச்சிக்கு வழிகோலுகிறது.
போதைப் பொருட்களுக்கு அடிமையாகிய இளைஞர்களின் குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, நட்பு, அலுவலக வேலை, உறவினர்கள் போன்ற எல்லாவற்றிலும் விரிசல் ஏற்படுகிறது.
போதை பாவனையால் இளவயதிலேயே இறந்துவிடும் குடும்பத் தலைவனால் அக்குடும்பமே சிதைந்து விடுகின்றது. குழந்தைகளுக்கு அன்பு ,அரவணைப்பு, வழிகாட்டுதல் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது.
போதைப் பாவனையால் வீட்டில் குடும்பத்தினரிடையே சண்டைகள் உருவாகி குடும்ப வன்முறைகளும் நிகழ்வது நாம் இன்று தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாது சமுதாயத்திலும் காண முடிகிறது.
போதைப் பொருள் பாவிக்கின்ற பல இளைஞர்கள் தமது கவலையை போக்கி கொள்வதற்காக அதனை பாவிப்பதாக கூறுகின்றார்கள்.
நம்பிக்கையின்மை போன்ற அவல நிலை
கடின வேலை செய்பவர்கள் தங்கள் உடல் வலியை மறக்கவும் ,பணக்கஸ்டம்உள்ளவர்கள் தமது கஷ்டத்தை மறக்கவும் போதையை நாடுவதாக சொல்லிக்கொள்கின்றார்கள்.
இப்போதைப்பழக்கத்தால் நரம்புகள் பாதிக்கப்பட்டு நினைவாற்றல் குறைவதோடு இதயத்துடிப்பு பாதிக்கப்படுகிறது.
இரத்த அழுத்தம் அதிகரித்து உடற்சோர்வு,தனிமை,நம்பிக்கையின்மை போன்ற அவல நிலையை உருவாக்கின்றது. இளவயதில் இப்போதைப்பொருளை பாவித்து இறப்பவர்களின் எண்ணிக்கையும் உடல்நலம் குன்றியோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.இதனால் சமூகம் பெரும் பாதிப்பை எதிர்நோக்குகிறது.
எல்லோருக்கும் எளிமையாகவும் பரவலாகவும் கிடைத்துள்ள இப்போதைப்பாவனை பள்ளி மாணவர்கள் இடையே தற்போது வேகமாக பரவி வருகிறது.
மாணவர்கள் போதைக்கு அடிமையாவதால் கல்வி வீழ்ச்சி,கலை வீழ்ச்சி ஏற்படுவதோடு சிறுவர் அத்துமீறல்களும் இடம்பெற்று வருகின்றன.
விழிபுணர்வு செயற்பாடு
பள்ளி மாணவர்கள் கற்றலில் விருப்பமின்மை, ஆசிரியர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளல் இப் போதையால் வந்த விளைவாகும்.
இந்நிலை மாறவேண்டுமாயின் விழிபுணர்வுகளை ஏற்படுத்துவதோடு மதுகடைகள், போதைப்பொருள் கம்பனிகள் போன்றவற்றை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதை தொடர்பான குற்றச் செயல்களுக்கு அதீத தண்டனைகளை வழங்குவதுடன் அது தொடர்பான சட்டங்களை பலப்படுத்துதலும் எமது சமுதாயம் மிளிர வழிகோலும்.
எனவே போதையால் பாதை மாறியவர்களை நல்வழிப்படுத்துவதோடு போதைப் பாவனையால் தடுத்து மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்குவதில் நாம் ஒன்றிணைவோம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |