வியாழேந்திரனின் மெய்பாதுகாவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞன்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு (Video)
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் அவரது மெய்பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (02.11.2022) நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன்னிலையில் நேற்று (02.11.2022) வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மாசி மாதம் 01ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு அன்று மட்டக்களப்பு, மன்ரேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக அவரது பாதுகாப்பு அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மகாலிங்கம் பாலசுந்தரம் என்னும் இளைஞர் உயிரிழந்திருந்தார்.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இந்த வழக்கு விசாரணைக்காக படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின்
தந்தையான வேலுப்போடி மகாலிங்கம், தாயாரான மா.சின்னப்பிள்ளை நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையாகியுள்ளதுடன் குறித்த மெய்ப்பாதுகாவலர் வழக்கிற்கு முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கவில்லை என்பதுடன் அடுத்த வழக்கு
விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
