தரிசு நிலங்களை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்:பிரசாந்தன்

Sri Lanka Politician Sri Lanka Economic Crisis
By Rusath Jun 17, 2022 07:43 AM GMT
Report

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களை பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு அக மற்றும் புற காரணங்கள் பல கூறப்பட்டாலும் வளங்கள் முறையாக முகாமை செய்யப்பட வேண்டிய கட்டாய தேவையும் இங்கு மேலோங்கிக் காணப்படுகின்றது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின், மண்முனைப்பற்று பிரதேச கிராமிய குழு உறுப்பினர்களுடனான விசேட மாதாந்த கலந்துரையாடல் நேற்று(16) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தரிசு நிலங்களை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்:பிரசாந்தன் | Youth Make Barren Lands Useful Prasanthan

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்கள் தமக்கான அரசியல் தலைமைகளை தெரிவு செய்வது அறிக்கைகள் விடுவதற்காகவும் நாடாளுமன்ற கதிரைகளை சூடாக்கி தமது தனிப்பட்ட சுய லாபத்திற்காக ஏனைய அரசியல் தலைவர்களையும் அரசியல் கட்சிகளையும் திட்டித் தீர்ப்பதற்காகவுமல்ல, தமக்கான பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது அதற்கு முகம் கொடுத்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே மக்கள் வாக்களிக்கிறார்கள்.

தரிசு நிலங்கள்

தரிசு நிலங்களை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்:பிரசாந்தன் | Youth Make Barren Lands Useful Prasanthan

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியினை எவரும் இன்னொருவர் மீது சுமத்திவிட்டு வேடிக்கை பார்க்க முடியாது. நாடாளுமன்றத்தில் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதேபோன்று நாட்டின் ஜனாதிபதியும் இதற்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டிய கடமையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

அதேபோன்று நாட்டின் அரச இயந்திரத்தினை அமுல்படுத்துகின்ற அதிகாரிகளின் நெறிப்படுத்தலும் அத்தியாவசியமானது.

உணவு பாதுகாப்பு விசேட திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற தரிசாக கிடைக்கின்ற அனைத்து அரச காணிகளிலும் பயிர் செய்வதற்கும், தானியங்களை வளர்ப்பதற்கும், கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கும் இளைஞர்கள் தயாராக இருக்கின்றார்கள் அவர்களுக்கான காணிகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

தரிசு நிலங்களை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்:பிரசாந்தன் | Youth Make Barren Lands Useful Prasanthan

அதேபோன்று பொருளாதார தட்டுப்பாடு நிலவுவது தொடர்பாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பதனால் அல்லது அறிக்கைகளை வாசித்துக் கொண்டு இருப்பதனால் சாதாரண கூலி தொழிலாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கப்போவதில்லை.

நாட்டில் இடம்பெற்ற யுத்த்தினால் எமது மாவட்டத்தில் பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வறுமை நிலைக்கு சென்றிருந்தன.

அதேபோன்று யுத்தத்தினால் விசேட தேவையுடையவர்களும், கூலித் தொழிலாளிகளும் அதிகமாக காணப்படுகின்றார்கள். அவர்களின் வறுமையை போக்குவதற்கு இவர்களின் நாளாந்த வாழ்வாதாரத்திற்கான நிவாரணங்களை வழங்கவேண்டிய நிலையுள்ளது.

ஊக்கப்படுத்தும் செயற்பாடுகள் 

தரிசு நிலங்களை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்:பிரசாந்தன் | Youth Make Barren Lands Useful Prasanthan

இளைஞர் யுவதிகளும் தங்களது ஓய்வு நேரங்களில் வீட்டு தோட்டத்திலும் பயிர்ச்செய்கையிலும் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனைக்கமைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஏற்ப்பாட்டில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதனை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தரிசு நிலங்களை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்:பிரசாந்தன் | Youth Make Barren Lands Useful Prasanthan

இதனை உணர்ந்து கட்சியின் ஒவ்வொரு போராளிகளும் இவ்வாறான பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

கட்சியின் தலைவரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு அனைத்து பிரதேச குழு தலைவர்களும் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US