கொழும்பில் பரபரப்பு! வீதியில் துரத்தி துரத்தி சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன் - வெளியான காணொளி
கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடு
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிப்பதற்காக கிளை வீதியொன்றில் இருந்து பிரதான வீதியை நோக்கி ஓடிய இளைஞனை துரத்தி துரத்தி துப்பாகிதாரி சுட்டுப் படுகொலை செய்துள்ளார்.
அதிகதூரம் ஓட முடியாது தடுமாறி விழுந்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் தெஹிவளை, ஓபன் பிளேஸில் வசிக்கும் ஒரு இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உயிரிழந்த நபர் நகரசபையின் துப்புரவு பணியில் ஈடுபடும் ஊழியர் என்றும், தெரிவிக்கப்படுகின்றது.
காணொளியை காண இங்கே அழுத்தவும்...
