புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞரை காணவில்லை! பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சங்கர் அருண் (வயது-24) என்ற இளைஞனே கடந்த 30 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேண்டுகோள்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த இளைஞன் கடந்த 30 ஆம் திகதி தனது வீட்டில் இருந்து அடம்பன் பகுதிக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற நிலையிலே இதுவரை வீடு திரும்பவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
மகன் வீடு திரும்பாத நிலையில் அவரது தந்தை அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த இளைஞன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 076- 712 1294 மற்றும் 077-0631135 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 9 மணி நேரம் முன்

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
