தமிழர் பகுதியில் சோகம்: குளத்தில் மூழ்கி இளைஞன் மரணம்
மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தாந்தாமலை குளத்தில் நேற்றைய தினம்(26.07.2023) நீராடிய போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களுவாஞ்சிக்குடி எருவில் காளிகோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய மோகனசிங்கம் பிரகதீசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
தாந்தாமலை முருகள் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் ஆலய வழிபாட்டுக்கு சென்ற குறித்த இளைஞனும் அவரது நண்பர்களுமாக தாந்தாமலை குளத்தில் நீராடிய போது, இளைஞன் நீரிழ் முழுகியதையடுத்து அவரை நண்பர்கள் காப்பாற்றி மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
