நீராடச்சென்று இளைஞன் நீரில் மூழ்கி மரணம் - சாம்பல்தீவில் சோகம்
திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாம்பல்தீவு, மாங்கனாய் குளத்திற்கு குளிக்கச்சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (03) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர் திருகோணமலை, கோணேசபுரி பகுதியைச் சேர்ந்த கமலதாசன் விஷ்வா (16வயது) எனவும் தெரியவருகின்றது.
சக நண்பர்களுடன் இன்று மாலை மாங்கனாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற போது தாமரைபூ பறிக்கச் சென்றுள்ளார்.இதன்போது தாமரைக் கொடி சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
