யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞன்: வெளியான அதிர்ச்சி தகவல்!

Sri Lanka Police Jaffna Northern Province of Sri Lanka
By Kajinthan Apr 20, 2025 06:30 AM GMT
Report

கொடிகாமம் - வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞன் குறித்து பல்வேறு திருக்கிடும் தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

“கடந்த வியாழக்கிழமை(17) எனது மகன் குளித்துவிட்டு வந்தவேளை 3.00 மணிக்கு பின்னர் எனது மகனை அவரது நண்பர் அழைத்துச் சென்றார். அவருடன் சென்றுகொண்டிருந்தபோது இன்னொரு நண்பர் குளிக்க வருமாறு தொலைபேசியில் கூறியவேளை எனது மகன் அவரிடம் சென்றுள்ளார்.

யாழில் மனைவியை பிரிந்திருந்த குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு

யாழில் மனைவியை பிரிந்திருந்த குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு


பொய்யான பெயர்

இதன்போது கொடிகாமம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவர்களுடன் இருந்துள்ளார். அந்த கேணியில் யாரும் குளிப்பதில்லை. அது கோவில் கேணி. தாமரை கொடி சிக்கி உயிரிழந்ததாக கூறியது பொய்.

அந்த கேணியில் தாமரை கொடியே இல்லை. மரண விசாரணை அதிகாரி, பொலிஸார், சட்டத்தரணி உள்ளிட்ட பலர் நேற்றையதினம் அந்த பகுதிக்கு வந்தனர். இரண்டுபேரை அந்த குளத்தில் இறக்கி குளத்தை பரிசோதித்து பார்த்தனர். ஆனால் இருவரும் எந்தவிதமான பாதிப்புமின்றி வெளியே வந்தனர்.

உயிரிழந்த மகனின் ஆடையும், செருப்பும் குளத்தின் கரையில் இருந்தது. கேணியின் அருகே 3 ரின்கள் இருந்தன. ஆனால் உடற்கூற்று பரிசோதனைகளில் இவர் மதுபானத்தை பாவித்ததாக அறிக்கையில் கூறப்படவில்லை.

யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞன்: வெளியான அதிர்ச்சி தகவல்! | Youth Drowns In Jaffna

தண்ணீர் சுவாசப் பையின் உள்ளே சென்று அடைத்ததால் தான் மரணம் சம்பவித்ததாக அறிக்கையில் கூறப்படுகிறது. தோளில் பிடித்து அழுத்திய கண்டல் காயம் உள்ளது. அவரது சடலம் தாண்டு இருந்த இடத்தில் ஒரு நீளமான மீற்றர் கட்டை ஒன்று குற்றப்பட்டு இருந்தது. அப்படி அவர் தாழ்ந்திருந்தால் அத்த கட்டையில் பிடித்து ஏறியிருப்பார்.

மந்திகை வைத்தியசாலையில் எங்களது பிள்ளையின் சடலம் இருப்பதாக கேள்வியுற்று நாங்கள் அங்கே சென்றவேளை, அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்தவர்கள் இருவர் பொய்யான பெயர் கொடுத்துள்ளனர் என்ற விடயம் தெரியவந்தது.

ஏன் பொய்யான பெயர் கொடுக்க வேண்டும்? அன்றையதினம் அவர் யாருடன் பேசினாரோ அவ்வளவு விபரங்களும் கைபேசியில் இருந்து அழிக்கப்பட்டிருந்தது. எங்களுடைய தம்பி ஒருவர் கைபேசியை வாங்கும் போது அங்கிருந்த ஒருவர் கைபேசியை பறித்தார், ஒரு மணத்தியாலம் அந்த கைப்பேசியை வழங்கவில்லை.

விசாரணை

சடலம் இருந்த இடத்தை நீதிவானுக்கு காட்டிய பொலிஸார் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர். பிறகு அவர்கள் வரவில்லை. எங்களிடம் விசாரணைகளுக்கு வந்த பொலிஸார், நீதிமன்றத்தில் நீங்கள் சட்டத்தரணி வைக்க வேண்டாம், நாங்கள் உங்களுக்காக வாதாடுகின்றோம் என்றனர்.

அவரது உடலை தொட்டவேளை உடலில் சூடு இருந்தது. ஆகையால் சடலத்தை பிரேத அறையில் போடவேண்டாம் என நாங்கள் கூறியவேளை, அவரது நண்பர்கள் சடலத்தை பிரேத அறையில் போடுமாறு விடாப்பிடியாக கூறினார்கள். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற சந்தேகம் எழுகிறது.

யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞன்: வெளியான அதிர்ச்சி தகவல்! | Youth Drowns In Jaffna

இந்த சந்தர்ப்பத்தில் உறவினர்கள் வைத்தியசாலையில் இல்லை. சிவரூபன் என்ற பெயரிலேயே கையொப்பமிட்டு அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். ஆனால் அந்த சிவரூபன் யார் என இதுவரை எமக்கு தெரியவில்லை. உடனிருந்த நண்பர்கள் யாரும் இதுவரை சடலத்தை பார்ப்பதற்கு வீட்டுக்கு வரவில்லை.

கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் தான் கொடிகாமம் பொலிஸ் இல்லை பருத்தித்துறை நிலைய பொலிஸ் என்று மந்திகை வைத்தியசாலையில் வைத்து கூறியுள்ளார். ஆனால் அவர் கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர். அவர் ஏன் பொய் கூற வேண்டும்? இந்த சதியில் ஈடுபட்ட 4 பேரை எமக்கு தெரியும்.

ஆனால் இதில் பலர் தொடர்புபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை சிலர் காணொளியும் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த காணொளி யாரிடம் உள்ளது என்று தேடி பிடிப்பதோடு, நாங்கள் கூறுகின்ற நான்கு பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்டால் என்ன நடந்தது என கண்டுபிடிக்க முடியும்” என தெரிவித்துள்ளனர். 

பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு கிடுக்குப்பிடி! கட்டுநாயக்கவில் விசேட அதிரடி நடவடிக்கை

பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு கிடுக்குப்பிடி! கட்டுநாயக்கவில் விசேட அதிரடி நடவடிக்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US