வவுனியாவில் வேகக் கட்டுப்பாடடை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் மரணம்
வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் விபத்துக் குள்ளானதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்றையதினம்(6) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.
உயிரிழப்பு
குறித்த மோட்டார் சைக்கிள் இராசேந்திரகுளம் பாடசாலை முன்பாகவுள்ள பேரூந்து தரிப்பு நிலையத்துன் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டார் சைககிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கோபால்ராஜ் நிலக்சன் (வயது 18) என்பவரே மரணமடைந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri