கனவரெல்ல தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் உயிரிழப்பு - செந்தில் தொண்டமான் விடுத்துள்ள எச்சரிக்கை
பதுளை - கனவரெல்ல தோட்டத்தில் தோட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவினாலும் அழுத்தங்களினாலும் உயிரிழந்த தோட்டத்தொழிலாளியின் மரணத்தை வன்மையாக கண்டிப்பதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
கனவரல்ல EGK தோட்ட பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் கடமை புரிந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் வேலை நேரத்தில் வேலைக்கு அப்பாற்பட்டு தோட்ட தொழிற்சாலை அதிகாரி ஒருவரின் குடியிருப்புக்கு நீர் குழாய் திருத்துவதற்காக சென்ற வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
எனவே உயிரிழந்த தொழிலாளியின் மரணத்திற்கு நியாமான தீர்வு எட்டப்படும் வரை பூதவுடல் அடக்கம் செய்யப்படமாட்டாது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்காத பட்சத்தில் பசறையில் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.