மதுபோதையில் இளைஞர்களின் அட்டூழியத்தினால் ஒருவர் உயிரிழப்பு
மட்டு. வாழைச்சேனையில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தும் வெடி இளைஞர் ஒருவரின் மேல் பட்டதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓமனியாமடு - கல்மடு மலையடிவாரம் எனும் இடத்தில் நேற்று இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
அங்கு சென்ற இளைஞர்கள் குழுவுக்கும் ஓமனியாமடு விஹாரதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது ஒருவரின் வயிற்றில் யானைகளை விரட்டப் பயன்படுத்தும் வெடி பட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஹேரத் முதியன்செலாகே சிசிர குமார என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த விஹாரதிபதி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
மது போதையில் இளைஞர்கள் அட்டுழீயம் புரிந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்க்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
