கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசமாக சிக்கிய கொழும்பு இளைஞர்
இரண்டு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தை அடைந்த சந்தேகநபர்
சந்தேகநபரான இளைஞர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்
இதன்போது சந்தேகநபரான இளைஞர் கொண்டு வந்த பயணப் பொதிகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.523 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri