யாழ். வடமராட்சியில் வாளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் வாளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைக்திடல் கிராமத்தில் பல்வேறு வாள் வாள்வெட்டு சம்பவங்கள், மக்களை அச்சுறுத்துதல் உட்பட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வாளுடன் கைது
நேற்று பிற்பகல் அவரது வீட்டில் வைத்து மருதங்கேணி பொலிஸாரால் சந்தேகநபர், வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்றும், பவருக்கு வாளால் வெட்டியமை, அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சந்தேக நபர் வெவ்வேறு இடங்களில் தலைமறைவாக வசித்துவந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது தாயார் வீட்டிற்க்கு வந்திறங்கி சில நிமிடங்களில் மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி போலீசார் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
