முத்தையங்கட்டு பகுதியில் சட்டவிரோத கோடாவுடன் இளைஞன் கைது
முத்தையங்கட்டு- இடதுகரை பேராற்று பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.சுபேசனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா 50ஆயிரத்து 600 மில்லிலீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் 24 வயதுடைய முத்தையங்கட்டு இடதுகரையை சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் ,கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு பிணை வழங்கப்பட்டு விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட இருப்பதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
