கிண்ணியாவில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளை, விற்பனை செய்வதற்காக தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம்(11) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா - மகரூப் நகர் பிரதேசத்தை சேர்ந்த, 33 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
காத்தான்குடியில் முன்னாள் ஆயுததாரியால் தமிழ்பேசும் பௌத்த துறவிக்கு நேர்ந்த கதி! அம்பலமாகும் ஆதாரங்கள்
கைது
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 2.720 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற, இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலதிக நடவடிக்கைகளுக்காக, சந்தேக நபர் நேற்றைய (11) தினம் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டபோது, அவரை மூன்று நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைத்து, விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam