யாழில் வீடுகளின் குளியறைகளுக்குள் கமரா பொருத்திய இளைஞர் கைது
யாழில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் கமரா பொருத்தி காணொளிகளை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் அத்துமீறி நுழைந்து குளியறைகளில் கமராக்களைப் பொருத்தி வீடியோ எடுத்து, இளைஞர் ஒருவர் வீட்டாரை மிரட்டி வந்துள்ளார்.

அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் , யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர்.
கண்காணிப்பு கமராக்களில் சிக்கிய நபர்
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த மாவட்ட குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர், அப்பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri