பிரித்தானியாவில் 3 பெண்களை மர்மான முறையில் கொலை செய்த இளைஞர் கைது
வடக்கு லண்டனில் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதலின் முடிவில், 3 பெண்களை மர்மமான முறையில் கொலை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் Hertfordshire-ல் Bushey பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த செவ்வாய் கிழமை இரவு மூன்று பெண்கள் கடும் காயங்களுடன் கண்டறியப்பட்டனர்.
பொலிஸார் எச்சரிக்கை
இதன்போது அங்கு 61 வயதான கரோல் ஹண்ட் மற்றும் அவரது மகள்கள் ஹன்னா (28) மற்றும் லூயிஸ் (25) ஆகியோர் காயங்களுடன் இருப்பதை கண்டறிந்தனர்.
மருத்துவ உதவி கிடைத்த போதிலும், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 26 வயதான கைல் கிளிபோர்ட்டை(Kyle Clifford ) பொலிஸார் அவசரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் குறித்த நபரை பொலிஸார் அவரது இல்லத்தை ஒட்டிய பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆயுதபாணியாக இருக்கக்கூடும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இவர் ராயல் லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அவர் மருத்துவ சிகிச்சை பெற்றதாக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
