யாழில் மோட்டார் சைக்கிளொன்றை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது
மோட்டார் சைக்கிளொன்றை திருடிச்சென்ற குற்றத்திற்காக யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரியில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமதிலக தலைமையிலான பொலிஸார் 24 வயதான சந்தேகநபரை சாவகச்சேரி பகுதியில் கைது செய்தனர்.
பொலிஸாரிடம் வாக்குமூலம்
சந்தேகநபரிடம் இருந்து, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் ஒரு கிராம் 30 மில்லிகிராம் அளவான ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வருகை தந்தபோது "வெளியே நின்ற மோட்டார் சைக்கிளை பார்க்க ஆசையாக இருந்தது. அதனால் அதனை திருடிச் சென்றேன்" என சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri