முகப்புத்தகத்தில் பெண் வேடமிட்டு 24 வயது இளைஞன் செய்த மோசமான செயல்!
முகப்புத்தகத்தில் பெண் வேடமிட்டு 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனை முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு “நவோத்யா” என்ற யுவதி போல் நடித்து, கம்பஹாவுக்கு அழைத்து வந்து மறைந்திருந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா, மகேவிட்ட பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாத சந்தேகநபர், தற்போது தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வரும் நிலையில், இவர் பிரிவெனாவில் கல்வி கற்று பல்வேறு விதமான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் அறிவுறுத்தல்
மேலும், இவர் பல ஆண்களிடம் பாலியல் நடத்தைகளை மேற்கொண்டு அவற்றினை படம்பிடித்து, மிரட்டி பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 14 வயது சிறுவன் தற்போது கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சந்தேகநபரால் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து புகார் தெரிவிக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam